ஆன்லைன் வகுப்புகள் நிறுத்திவைப்பு! பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை வெளியீடு!

0
200

கொரோனா  பெரும் தொற்று காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சில பள்ளிகளில் ஜூன் 20 20 முதல் இணைய வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இணைய வழிக் கல்விக்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன.இவற்றை பின்பற்றியு வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வருடத்தில் ஒருமுறை செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் காலாண்டு தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுப்பு அறிவிப்பது நடைமுறையாகும்.

இணைய வழி வகுப்புகள் நடைபெறும் இந்த சூழ்நிலையில் செப்டம்பர் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறை என அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார். 

தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக செப்டம்பர் 21ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் இணைய வழி வகுப்புகள் நடைபெறாது என அரசாணை பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப் பட்டுள்ளது. எனவே அனைத்து வகை பள்ளிகளிலும் செப்டம்பர் 21 முதல் 25 வரை எந்தவித இணையவழி வகுப்புகளும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous articleரயில்வேத்துறையை தனியார் மயமாக்கப்படுமா? இல்லையா? பியூஷ் கோயல்!
Next articleஇன்றைய ராசி பலன் 17-09-2020 Today Rasi Palan 17-09-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here