ஆன்லைன் கேமில் வன்முறை! குழந்தைகள் பாதிக்கப்படும் அவலம்!

0
186
Online game violence! Children are suffering!
Online game violence! Children are suffering!

ஆன்லைன் கேமில் வன்முறை! குழந்தைகள் பாதிக்கப்படும் அவலம்!

பிரீ பையர் விளாயாட்டு என்பது தற்போதுள்ள வாலிபர்கள் ,மற்றும் இளம்பெண்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.பிரீ பையர் விளையாட்டில் மூழ்கி நண்பர்களுடன் தங்களின் மகள் சென்று விட்டார் என அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் ஒரு பெற்றோர் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த விசாரணையில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும் மீண்டும் வேறொரு பெயரில் அதே விளையாட்டுகள் வருவதாகவும்  இதனை முழுமையாக தடை செய்வது என்பது முடியாத காரியமாக உள்ளது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும் தற்போதுள்ள பெற்றோர்கள் குழந்தைகளின் நலன் கருதாமல் அவர்கள் ஆசையாக கேட்டவுடனே மொபைல் போன் வாங்கி கொடுத்து விடுகின்றனர்.

அதனால் குழந்தைகள் ஒருவருக்கொருவர் நேரில் பேசிக்கொள்வதை தவிர்த்து ஆன்லைன் கேம் மற்றும் வீடியோ கால் போன்றவைகள் மூலம் தான் பேசி வருகின்றனர் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.ஆன்லைன் கேமில் ரத்தம் போன்றவைகள் வருவது  குழந்தைகளிடம்  வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது எனவும் கூறியுள்ளனர்.

Previous articleஇது சாதாரண பத்திரிகைச் செய்தி அல்ல! தமிழக அரசை எச்சரிக்கும் ஓபிஎஸ் 
Next articleதமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்னும் 2 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு