சீனாவில் அதிரடி கட்டுப்பாடு : சிறுவர்களுக்கு தடை

Photo of author

By Parthipan K

சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருவதால் சில நாடுகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தும் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். சீனாவில் 18 வயதுக்கு உட்பட்டோர் பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி நேரத்தை வீணடிப்பது ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக வார இறுதி நாட்களில் பெரும்பாலானோர் மற்ற விளையாட்டுகளை காட்டிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது சீன அரசுக்கு கவலையை ஏற்படுத்தியது. இதனால் அரசு 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு வாரத்தில் மூன்று மணி நேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.

சீனாவைப் போன்றே கொரியா இந்தியா ஆகிய நாடுகளிலும் சிறுவர்கள் அதிக அளவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர். இந்தியாவிலும் இதேபோல் கட்டுப்பாடுகள் ஏற்படுத்த வேண்டும் என்பதே பல்வேறு மக்களின் கோரிக்கையாக உள்ளது.