நைட்டி விலை Rs 599!!!ஆனால் இழந்தது Rs 60000… ஆன்லைன் மோசடி?

Photo of author

By Pavithra

சென்னை கொரட்டூரை சேர்ந்த செல்வராணி என்பவர் கடந்த 30ம் தேதி கிளப் பேக்டரி என்கிற ஆன்லைன் செயலி மூலம் 599 ரூபாய் மதிப்புள்ள நைட்டி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.அதுவும் தன் கணவரின் டெபிட் கார்டில் இருந்து prepayment செய்தார். அன்றே சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் அவரின் ஆர்டர் வருவதற்கு தாமதமாகியது இதனால் அந்தப் பெண் ஆர்டரை கேன்சல் செய்தார்.ஆர்டரை கேன்சல் செய்த பிறகு பணம் திரும்ப கொடுப்பதற்கான எந்தவிதமான மெசேஜும் வரவில்லை.

இதனால் அந்தப் பெண் கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்து பேசினார்.காலை எடுத்து பேசிய எதிர்முனையாளர் உங்கள் பணத்தை திரும்பி வங்கி கணக்கில் செலுத்த கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நாங்கள் சொல்லும் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதில் உங்கள் பேங்க் விவரங்களை தர வேண்டும் என்று கூறினார்.

இதனை நம்பிய அந்த பெண் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ததோடு பேங்க் விவரங்களை அதாவது டெபிட் கார்ட் விவரங்களை போட்டோ எடுத்து அனுப்பி உள்ளார்.அனுப்பிய ஐந்து நிமிடத்தில் அவரது அக்கவுண்டில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருகிறது என்று அந்தப் பெண்ணின் கணவரின் மொபைலிருக்கு எஸ்எம்எஸ் போகவே கணவர் அந்த பெண்ணிடம் போன் செய்து பணம் டெபிட் ஆனதை பற்றி கூறியுள்ளார்.

அப்பொழுதுதான் அந்தப் பெண்ணிற்கு தன்னை ஏமாற்றி உள்ளார்கள் என்று புரிய வந்தது.மேலும் அதே தொலைபேசி எண்ணிற்கு அழைத்து பேசினார்.ஐந்து நிமிடத்தில் போட்டு விடுவதாக கூறி விட்டு அந்த நபர் போனை ஆப் செய்துள்ளார்.

அந்தப் பெண் உடனடியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார்.அந்த புகாரில் கஸ்டமர்கேர் நபரிடம் பேசிய ஆடியோவையும் இணைத்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆன்லைன் மோசடி குறித்து காவல்துறையினரிடம் பேசியபோது, தங்கள் வங்கி விவரங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டும் யாரிடம் தெரிவிக்கக் கூடாது என்று பல விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தினாலும் அவர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைக்கிறார்கள். இணையதளத்தில் கஸ்டமர்கேர் என்று மோசடி கும்பல்கள் தங்களுடைய நம்பர்களை பதிவு செய்து வைத்துள்ளனர். அதனால் கஸ்டமர் கேர் நம்பருக்கு போன் செய்வதற்கு முன் அது உண்மையான தொலைபேசி எண்களா என்பதை செக் செய்துகொள்ள வேண்டும். இனியாவது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கினர்.