எங்களுக்கு இடையில் வந்தது கிரீன் டீ மட்டுமே!! மனம் திறந்து பேசிக் கொண்ட ரஜினி மற்றும் வைரமுத்து!!

Photo of author

By Gayathri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கவிஞர் வைரமுத்து இருவரும் சமீபத்தில் சந்தித்த பேசியிருக்கின்றனர். நீண்ட நாள் கழித்து இவர்கள் இருவரும் பேசி மகிழ்ந்து தருணத்தை தன்னுடைய அழகிய வரிகளால் வருணித்திருக்கிறார் வைரமுத்து அவர்கள்.

வர்ணித்த வரிகளை தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வரிகள் பின்வருமாறு :-

உரையாடல்

சிலபேரோடுதான் வாய்க்கும்

அவருள் ஒருவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

80நிமிடங்கள்

உரையாடியிருக்கிறோம்

ஒரே ஒரு

‘கிரீன் டீ’யைத் தவிர

எந்த இடைஞ்சலும் இல்லை;

இடைவெளியும் இல்லை

சினிமாவின் அரசியல்

அரசியலின் சினிமா

வாழ்வியல் – சமூகவியல்

கூட்டணிக் கணக்குகள்

தலைவர்கள்

தனிநபர்கள் என்று

எல்லாத் தலைப்புகளும்

எங்கள் உரையாடலில்

ஊடாடி ஓய்ந்தன

எதுகுறித்தும்

அவருக்கொரு தெளிவிருக்கிறது

தன்முடிவின் மீது

உரசிப் பார்த்து

உண்மை காணும்

குணம் இருக்கிறது

நான்

அவருக்குச் சொன்ன

பதில்களைவிட

அவர் கேட்ட கேள்விகள்

மதிப்புமிக்கவை

தவத்திற்கு ஒருவர்;

தர்க்கத்திற்கு இருவர்

நாங்கள்

தர்க்கத்தையே

தவமாக்கிக் கொண்டோம்

ஒரு காதலியைப்

பிரிவதுபோல்

விடைகொண்டு வந்தேன்

இரு தரப்புக்கும்

அறிவும் சுவையும் தருவதே

ஆரோக்கியமான சந்திப்பு

அது இது”

இவராக தங்களுடைய அன்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டு இருக்கிறார் வைரமுத்து அவர்கள்.

நடிகர் ரஜினியின் உடைய வேட்டையன் படம் திரையிடப்பட்டு எதிர்பார்த்த வசூலை கொடுக்கவில்லை என்று சினிமா துறையில் பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரஜினி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தற்பொழுது கூலி திரைப்படம் நடித்து வருகிறார்.

கவிஞர் வைரமுத்து அவர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் பாடல்களை இயற்றவில்லை. இவர் மீது பாடகி சின்மையி அவர்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இவர் மட்டுமின்றி பாடகி சுசித்ரா அவர்களும் தன் இடத்தில் வைரமுத்து அவர்கள் தவறான முறையில் நடந்து கொண்டார் என்று தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்கும் நிலையில் இருவரும் இணைந்து நீண்ட நேரம் பேசியதை மனமகிழ்வோடு தன்னுடைய அழகிய வரிகளால் வெளியிட்டிருக்கிறார் வைரமுத்து அவர்கள்.