இனி வரும் காலத்தில் விவசாயிகள் இதை செய்தால் மட்டுமே தவணை!..மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்ட அறிக்கை?
பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் கீழ் பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என வெளியிடப்பட்டிருந்தது.இந்நிலையில்
செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்வதினால் மட்டுமே அவர்களுக்கு கொடுக்கப்படும் அடுத்த தவணையும் கிடைக்கும். இதனால் விவசாயிகள் அனைவருமே கேஒய்சி செயல்முறையை கட்டாயம் செய்திருக்க வேண்டும்.அதன்படி ஆதார் அங்கீகாரத்தை பொறுத்து இரு வழியில் இணைக்கலாம்.
அதனை pmkisan. gov. in என்ற இணையதளம் மற்றும் பிஎம்கிஷான் எனும் செயலியில் பயனாளிகள் தங்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டும் பதிவு செய்யலாம் .மேலும் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுக்கு வரும் ஓடிபி எண்ணை சரியாக பதிவிட்டால் இணையலாம்.
இதில் எனக்குளுக்கு சிரமம் ஏற்படுவதாக கருதப்பட்டால் பயனாளிகள் பொது சேவை மையத்தை அணுகி 15 ரூபாய் கட்டணமாக செலுத்தி ஆதார் விபரங்களை இணைக்கலாம். இவ்வாறு செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் அறிக்கையில் கூறிவுள்ளார்.இந்த அறிவிப்பு விவசாயிகளின் நலனை கருதி கூறப்பட்டவையாகும்.