ஒரு நாள் மட்டுமே இருகின்றது மக்களே முந்துங்கள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு இனி காலவகாசம் கிடையாது!

Photo of author

By Parthipan K

ஒரு நாள் மட்டுமே இருகின்றது மக்களே முந்துங்கள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு இனி காலவகாசம் கிடையாது!

Parthipan K

Only one day left, hurry up folks! No more time limit for linking Aadhaar number with electricity connection!

ஒரு நாள் மட்டுமே இருகின்றது மக்களே முந்துங்கள்! மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பிற்கு இனி காலவகாசம் கிடையாது!

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர் அனைவரும் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் அவரவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதளம் மற்றும் மின்வாரிய அலுவலகங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி நடைபெற்று வருகின்றது.

ஆதார் எண்ணை இணைக்க கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலவகாசம் கொடுக்கபட்டிருந்தது.அதனை தொடர்ந்து பலரும் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்காத காரணத்தினால் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அந்த கால அவகாசம் நாளையுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் மின் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் நம்பரை மின் நுகர்வோர் கொடுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.