மூன்றே பொருட்கள் மட்டும் போதும்! முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்!

Photo of author

By Parthipan K

மூன்றே பொருட்கள் மட்டும் போதும்! முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்!

தற்போதைய காலகட்டத்தில் அழகில் பெண்களுக்கு சவாலாக இருப்பது முகப்பருக்கள் தான். அந்த முகப் பருக்களை போக்குவதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழி முறைகள் கூறுவார்கள்.

எதைக் கேட்பது என்று நமக்கே குழப்பம் ஏற்படும். அந்தக் குழப்பத்திற்கு  எல்லாம் முற்றுப்புள்ளியாக இந்தச் செய்தி அமையயுள்ளது.

முகப்பருக்களை நீக்குவதற்கு இந்த எளிய வழிமுறையை செய்தால் போதும். முகம் பருக்கள் நீங்கி பளபளவென்று கண்ணாடி போல் முகம் மின்னும்.

முகப் பருக்களை நீக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் முல்தானி மெட்டி என்பது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. முல்தானி மெட்டியை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி பளிச்சென்று ஆகிவிடும்.

முல்தானி மெட்டியுடன் வீட்டில் பயன்படுத்தும் சோடா உப்பை பயன்படுத்துவதன் மூலம் முகப்பருக்களால் ஏற்படும் வீக்கம்  உடனடியாக சரியாகும்.

முகப்பருக்கள் வருவதற்கு முக்கிய காரணம் முகத்தில் உள்ள பாக்டீரியாக்கள் ஆகும். அந்த பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி கொண்டது எலுமிச்சை போன்ற மூன்று பொருட்களைக் கொண்டு முகப்பருட்களை  உடனடியாக நீக்கலாம்.

முல்தானி மெட்டி ஒரு டீஸ்பூன், சோடா உப்பு ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு கால் டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து  பிறகு முகப்பருக்களின் மீது தடவ வேண்டும். பத்து நிமிடத்தில் இருந்து15 நிமிடங்கள்  கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் 3 முறை செய்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.