இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே காலவகாசம்! மக்களே முந்துங்கள் இல்லையெனில் இதுதான் நிகழும்!

Photo of author

By Parthipan K

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே காலவகாசம்! மக்களே முந்துங்கள் இல்லையெனில் இதுதான் நிகழும்!

Parthipan K

Updated on:

Only two months left! Get ahead people or this is what will happen!

இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே காலவகாசம்! மக்களே முந்துங்கள் இல்லையெனில் இதுதான் நிகழும்!

தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சொத்து வரியில் இருந்து தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவில் வருவாய் கிடைகிறது.இந்த வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும், சாலை வசதி, குடிநீர் வசதி, கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது.

இந்த சொத்து வரியை அனைவரும் ஆண்டுதோறும் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் செலுத்த வேண்டும்.அதற்கான காலவகாசம் இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை இன்னும் ஐந்து லட்சம் பேர் சொத்து வரியை செலுத்தாமல் உள்ளனர். இதுவரை 7 லட்சம் பேர் மட்டுமே சொத்து வரியை செலுத்தியுள்ளனர்.

மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என மாநகாராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.மார்ச் மாதத்திற்குள் செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் அவர்களுடைய கட்டிடம் சீல் வைக்கப்படும்.அந்த கட்டிடங்களில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஜப்தி செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் சொத்து வரியை செலுத்தாதவர்கள் உடனடியாக விரைந்து செலுத்த வேண்டும் என மாநகாராட்சி அறிவுறுத்தி வருகின்றது.