பாஜகவை கலாய்த்த கமல்ஹாசன்!

Photo of author

By Sakthi

ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, என்பதை அமல்படுத்தி இருக்கும் பாரதிய ஜனதா இந்தியா முழுவதும் ஒரே மொழி என்று அமல்படுத்த முயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கின்றன. அதோடு மோடி அவர்களே அடுத்த முறையும் பிரதமராக வருவதற்கான முயற்சிகளும் நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது பாஜக என்ற பேச்சும் எழுந்திருக்கின்றது.

இந்த நிலையில், சீரமைப்போம் தமிழகத்தை என மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில்,போன்ற பகுதிகளில் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், ஒரே தேர்வு,ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே இந்தி. ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா, என்ற வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ஒரே பிரதமர் என்று தெரிவித்திருக்கின்றார்.

எங்கே ஒரே என்ற வார்த்தை வருகின்றதோ, அங்கேயே சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தான் தலைதூக்கி இருக்கின்றது ,என்பதுதான் கடந்தகால வரலாறு சமூக நீதியும் சமநீதியும் அற்ற ஏற்றத்தாழ்வு சமுதாயத்தில் மட்டுமே ஒரே என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். இது மாபெரும் அநீதி என மிகக் கடுமையாக தாக்கிப் பேசி இருக்கின்றார்.

கமல்ஹாசனை பாஜகவின் பி.டீம் என தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வரும் நிலையிலேயே, கமல்ஹாசன் இப்படி தெரிவித்திருப்பது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .