பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!!

Photo of author

By Jeevitha

பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!!

திறந்த வெளி சிறையில் கைதிகள் நன்னடத்தை மற்றும் ஒழுக்கமாக இருப்பின் அனுமதிக்கப்படுவர். அங்குள்ள கைதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதன் மூலம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டப் பிறகும் ஒரு இனிய வருங்காலத்தை ஏற்படுத்திகொள்ள முடியும். இந்த திறந்த வெளி சிறையானது அங்கு வசிக்கும் கைதிகளின் மனது அடிப்படையில் ஒரு சரியான மாறுதலுக்கு வழி வகுக்கும்.

ஏற்கனவே ஆண் கைதிகளுக்கு மட்டும் திறந்த வெளி சிறை அமைந்திருப்பதை அடுத்து அதேபோல் பெண் கைதிகளுக்கும் இவ்வாறு அமைக்க வேண்டும் என்று 2018 ஆம் ஆண்டு பொதுநல மனுவானது கே. ஆர். ராஜா என்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவரால் தாக்கல் செய்யப்பட்டு இதற்கான கோரிக்கைகளுடன் முன்வைக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பெண் கைதிகளுக்கு திறந்த வெளி சிறையினை அமைக்க அனுமதிக்க மறுத்து வந்த சிறைத்துறை விதிக்கான மறுபரிசீலனை செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு இதற்கான அரசாணையை 2021 ஆம் ஆண்டு வெளியிட்டது.

எனவே புதிதாக ஏந்தவிதமான உத்தரவும் கொடுக்க அவசியமில்லாததாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் ஆர்.விஜயகுமார் போன்றோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கான முடிவினை வல்லுநர் குழு மற்றும் தமிழக உள்துறை செயலர் ஆகியோர்களால் தக்க முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற தீர்ப்புடன் பெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை அமைப்பு தொடர்பான வழக்கானது முடித்து வைக்கப்பட்டது.

தமிழகத்தில் மட்டும் ஒன்பது மத்திய சிறைகளும், ஒன்பது மாவட்ட சிறைகளும், பன்னிரண்டு இளஞ்சிறார் சிறைகளும், மூன்று திறந்த வெளி சிறைகளும், 95 சப் ஜெயில்களும், பெண் கைதிகளுகென்றே மூன்று சப் ஜெயில்களும் அமைந்துள்ளன. இதில் சுமார் 9156 விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர் என்றும் மேலும் தண்டனைக் கைதிகள் மட்டும் 4966 பேர் உள்ளனர் என்று தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றில் இதனால் பெண்கைதிகளுக்கும் திறந்தவெளி சிறை அடைப்பு வேண்டும் என்று கே.ஆர். ராஜா குறிப்பிட்டுள்ளார்.