சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!! 

0
114
Opening of Sabarimala Ayyappan!! Devotees, early booking has started!!
Opening of Sabarimala Ayyappan!! Devotees, early booking has started!!

சபரிமலை ஐய்யப்பன் நடைத்திறப்பு!! பக்தர்களே முந்துங்கள் முன்பதிவு ஆரம்பம்!! 

தமிழ் ஆடிமாத பிறப்பு மற்றும் மலையாள கருக்கிடக பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது.

கேரளாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில் ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ் ஆடி மாதம், மலையாள கருகிடக மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5;30 மணி அளவில் திறக்கப்பட உள்ளது.

அன்று மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. ஆடி மாத பிறக்க உள்ளதால் கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். மேலும் நாளை முதல் ஜூலை21 வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான பூஜைகளோடு, தினமும் இரவு 7 மணிக்கு படிபூஜைகளும் நடக்கும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பக்தர்கள் வழக்கம்போல் முன்பதிவு செய்து பூஜைக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கு பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

மேலும் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் என மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரள அரசின் போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. 

Previous articleடெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு பாஜக கட்சிதான் காரணம்! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி!!
Next articleதிடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விடுத்த புவியியல் மையம்!!