Operation Sindoor: 7 தீவீரவாதிகள் அடுத்தடுத்து பலி.. அதிரடி காட்டிய இந்திய இராணுவம்!!

Operation Sindoor: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சித்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்க அதிபரும் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு பாகிஸ்தானும் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதலை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நேற்று இரவு முதல் பஞ்சாப் காஷ்மீர் சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த முயற்சித்து வான்வழி ட்ரோன்கள் வந்த வண்ணமாகவே உள்ளது. இதனை இந்திய ராணுவ படை லாவகமாக கையாளுகிறது.

அதேபோல இந்திய எல்லை சுற்றி ராணுவ வீரர்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்துமீறி ஏதேனும் தீவிரவாதிகள் உள் நுழைகிறார்களா என்று கண்காணித்தும்  வருகின்றனர். இப்படி தீவிர கண்காணிப்பில் இருக்கும் போதே ஜம்மு காஷ்மீரில் சம்பா என்ற இடத்தில் 7 தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் அந்த ஏழு பயங்கரவாதிகளையும் இந்திய ராணுவத்தினர் சுட்டுக் வீழ்த்தியுள்ளனர்.

மேற்கொண்டு இதைப்போல் யாரேனும் உள்ளார்களா என்று விசாரணை செய்தும்  வருகின்றனர். இந்தியா பாகிஸ்தான் போர் குறித்து உலக நாடுகள் கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் பாகிஸ்தானையே முழுமையாக எச்சரித்துள்ளனர். வரும் நாட்களில் போர் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் சண்டிகர் மாநிலத்தில் உள்ள மக்களுக்கும் அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. யாரும் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் , அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி கேட்டுள்ளது.