OPS BJP: அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஐ நீக்கினாலும் அதற்கு மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. மோடியிலிருந்து மத்திய மந்திரி அமித் ஷா வரை பலரும் எடப்பாடி யிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீங்கள் மீண்டும் இணைய வேண்டும் அப்போது தான் அதிமுகவின் வாக்குகள் சிதறாது எனக் கூறினர். ஆனால் அதனை எடப்பாடி சிறிதும் கூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மேலும், வரும் நாட்களில் ஒருபோதும் சசிகலா ஓபிஎஸ் தினகரன் உள்ளிட்டவர்களுடன் கூட்டணியில் இணைய மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
அதிலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகிய பிறகு பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவையே கைப்பற்றி தருவதாக டீல் எல்லாம் பேசினர். இதனின் உச்சகட்டம் தான் தற்போது நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் வழக்கு. ஆனால் அதன் சாதகமானது எடப்பாடி பக்கம் உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது வரப்போகும் சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளதால், பன்னீர்செல்வத்தை பாஜக மத்தியில் ஒதுக்கி வைத்துள்ளனர்.
இதனால் மத்திய மந்திரி, மோடி என யாரும் அவரை சந்திப்பதில்லை. மேற்கொண்டு சந்திக்கும் பட்சத்தில் அதிமுக கூட்டணிக்குள் இடர்பாடு ஏற்படும் என்பதால் அதனை தவிர்த்து வருகின்றனர். இதனை பொறுக்க முடியாமல், ஓபிஎஸ் உடனடியாக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் எதற்காகவும் பாஜகவிற்கு எதிராக வாய் திறக்காத ஓபிஎஸ், முதல்முறையாக தமிழக முன்மொழிக் கொள்கையை எதிர்த்த காரணத்திற்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை கொடுக்காதது குறித்து கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை வைத்தே தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் வெளியேறுவது உறுதியாக உள்ளது.
மேற்கொண்டு அதிமுகவிலும் சேர்த்துக் கொள்ளாத நிலையில் வேற ஏதும் மாற்று கட்சியில் கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக அவரது நம்பிக்கை வட்டாரம் பேசி வருகின்றனர்.