எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!!

Photo of author

By Rupa

எதிர்கட்சி தலைவர் வைத்த கோரிக்கை! பரிசீலனை செய்வாரா மோடி!!!

கொரோன தொற்றானது ஓராண்டு காலத்தையும் தாண்டி இந்த ஆண்டையும் தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2வது அலை மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது.அந்தவகையில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதுகாக்க பல்வேறு செயல்பாடுகளை நடைமுறை படுத்தி வருகிறது.கடந்த மாதம் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தல் பிறகு பல மாநிலங்களில் தொற்று அதிகளவு பரவ ஆரம்பித்து விட்டது.அதுமட்டுமின்றி தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியுடன் திமுக ஆட்சியமைத்தது.

திமுக ஆட்சி அமைத்ததும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இருப்பினும் முன்னால் முதல்வர் தலைமையில் தமிழகம் இருந்த போது கொரோனாவை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்கான பட்டம் பெற்றார்.அதுமட்டுமின்றி மக்கள் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.தற்போது அவரது ஆட்சி அமையாவிட்டாலும் மக்கள் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசுக்கு தொடர்ந்து  பரிந்துரை செய்து வருகிறார்.

அதுமட்டுமின்றி இந்த கொரோனாவின் 2 வது அலை மிக மோசமாக மக்களை பாதித்து வரும் நிலையில் மக்கள் தடுப்பூசி இல்லாமலும் ஆக்சிஜன் இல்லாமலும் திண்டாடி வருகின்றனர்.இதை பயன்படுத்திக்கொண்டு சில மோசடி கும்பல் கொரோனா தடுப்பூசியை அதிக பணத்திற்கு வெளியே விற்று வருகின்றனர்.தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள மக்கள் வேறு வழியின்றி கள்ளச்சந்தையில் அதிகம் பணம் கொடுத்து தடுப்பூசியை வாங்கி செல்கின்றனர்.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தியது.கள்ளச்சந்தையில் தடுப்பூசி விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படும் என கூறினர்.அதுமட்டுமின்றி சென்னையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரெம்டெசிவிர்  மருந்து வழங்கி வந்தனர்.அந்த தடுப்பூசி மருந்திற்காக மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து, வாங்கி கொண்டு சென்றனர்.

மக்கள் காத்திருப்பதாலும் அவ்வாறு காத்திருக்கும் வேளையில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.அதனால் நாளை மருந்து வாங்குபவர்களுக்கு இன்றே டோக்கன் கொடுத்து தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது.ஆனால் டோக்கன் கொடுத்த நபர்களுக்கு தடுப்பூசி மருந்து வழங்காமல் வேறு நபர்களுக்கு வழங்கியதால் மக்கள் கோவமடைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த முன்னால் முதல்வர் பிரதமர் மோடிக்கு அதிரடியாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியதாவது,தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு முற்பத்து இரண்டாயிரம் பேர் கொரோனாவின் இரண்டாம் அலையால் பாதிக்கபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பாதித்த மக்கள் தடுப்பூசி இன்றி திண்டாடி வருகின்றனர்.அதுமட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடாக உள்ளது.

இருப்பினும் தமிழகத்தில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் காணப்படுவதால் கூடுதல் விநியோகம் செய்யுமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.அத்தோடு வெளிநாடுகளில் பயின்ற தமிழகத்தை சேர்ந்த 600 மருத்துவர்களை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள பயிற்சி மருத்துவர்களாக நியமிக்க முன்னால் முதல்வர் எடப்பாடி தமிழக அரசுக்கு அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.