முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தொடர்! போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சிகள்!

Photo of author

By Sakthi

கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமானது அன்று ஆரம்பித்த குளிர்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரையில் ஒட்டு மொத்தமாக 19 தினங்கள் நடைபெற இருந்த நிலையில், நேற்றைய தினம் நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.பேகசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக, மத்திய அரசு இந்த முடிவை மேற்கொண்டிருக்கிறது.

நேற்றைய தினம் உரையாற்றிய மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு இந்த குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட விதம் மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்து கண்கலங்கி இந்த குளிர்கால கூட்டத்தொடர் இவ்வளவு மோசமாக நடைபெறுவதற்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்து அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.அதேபோல மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சபையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, தேதி குறிப்பிட்டு அதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இதை கண்டிக்கும் விதமாக இன்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் திராவிடர் முன்னேற்ற கழகம், சிவ சேனா உட்பட 14 எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் நாடாளுமன்ற பகுதியிலிருந்து விஜய் சவுக் வரையில் பேரணியாக சென்று இருக்கிறார்கள். அந்த சமயத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டனக் குரல்களும் எழுந்திருக்கிறது.

இந்த பேரணிக்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கின்றார். அங்கே எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காததன் காரணமாக தான் நாங்கள் பத்திரிகையாளர்கள் முன்பு பேசிக்கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத்தில் எங்களை பேச அனுமதி வழங்காதது ஜனநாயகப் படுகொலை என்று தெரிவித்திருக்கிறார்.

மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை என்று 60 சதவீத மக்கள் கவலை கொள்கிறார்கள் 60 சதவீத மக்களின் குரல்களும் மறுக்கப்பட்டிருக்கிறது. நேற்றைய தினம் மாநிலங்களவையில் உடல் ரீதியாக தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், தன்னுடைய 55 வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் இது போன்ற ஒரு நிகழ்வை நான் கண்டதில்லை என்று தெரிவித்ததோடு பாகிஸ்தான் எல்லையில் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு உண்டாக்கியது என்று தெரிவித்திருக்கிறார்.