அமரன் படத்திற்கு எதிர்ப்பு!! திரையரங்கில் பெட்ரோல் குண்டுவீச்சி!!

Photo of author

By Vinoth

திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள அலங்கார்  திரையரக்கு  இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அடையாளம் தெரியாத  2 நபர்கள் அவர்கள் மறைத்து  வைத்து இருந்த பெட்ரோல் குண்டுகளை திரையரக்கு  மேல் விசிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்கள் மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகளை திரையரக்கு  மேல் வீசப்பட்டனர். ஆனால் அவர்கள்  சரியாக திரையரங்கு மேல் வீசாமல் வெளியில் வீசியுள்ளனர் அதனால் பொருள் சேதம் அதிகம் இல்லை என திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கு  காரணம்  என்வென்று போலீஸ்சர் வழக்கு பதிவு செய்தது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தை திரையரக்கு சிசிடிவி கட்சிகளை கைப்பற்றி காவல் துறை தப்பியோடிய 2 மர்ம நபர்கள் விசாரணை நடத்தி தேடிவருகின்றனர். இதற்கு காரணம் அந்த திரையரங்கில்  இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தீபாவளியன்று அமரன் படம் வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது. இப்படத்தில் முகுந்த் வேடத்தில் சிவகார்த்திகேயன், அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வேடத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

இந்த படம் அனைவரும் பாராட்டப்பட்டாலும் ஒரு சில எதிர்ப்புகள் தற்போது கிளம்பி வருகிறது. அதற்க்கு காரணம் காஷ்மீர் உள்ள இஸ்லாமிய மக்களை  தீவரவாதிகள் போல படம் எடுக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் காரணமாக கூட இருக்கலம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள முக்கியமான திரையரக்குளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது