ADMK NTK: தமிழக அரசியல் களமானது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது என்று சொல்லலாம் பாஜக அதிமுக கூட்டணி முறிவு பெற்ற நிலையில் தற்சமயம் மீண்டும் இணக்கமாக தயாராகி வருகிறது. கூடுதலாக பாஜகவிற்கு சீமானின் ஆதரவும் கிடைத்துள்ளது. இவரின் ஆதரவானது மறைமுகம் என்று கூறினாலும், வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டும் காட்டும் வகையில் தான் அனைத்து நடவடிக்கைகளும் உள்ளது. அதன்படி தமிழக அரசானது நீட் தேர்வை புறக்கணிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் முதல் ஆளாக சீமான் இந்த நாடகம் என்னும் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்தார். இது பாஜகவிற்கான மறைமுக சாடல் தான் என அனைவரும் புரிந்து கொண்டனர். அவரைப் போலவே இன்று எடப்பாடி பழனிச்சாமியும் அதாவது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரமானது மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என கூறும் திமுக தற்போது நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் மட்டும் என்ன செய்யப் போகிறது?? அதனால் நான் திமுக நடத்தும் இந்த நாடகத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இது அனைத்தும் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலுக்காக செய்யும் திட்டம் என்றும் கூறினார். பாஜக வை எதிர்க்கும் செயலில் அதிமுக எடப்பாடி மற்றும் நாம் தமிழர் கட்சி சீமான் ஒன்றிணைந்து ஒருசேர கருத்துக்களை தெரிவித்திருப்பது அரசியல் சூழலில் சற்று உற்று கவனிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கிறது. இது நாளடைவில் கூட்டணிக்கு வலுவகுக்கும் எனக் கூறுகின்றனர்.