விவசாய சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்த்து பஞ்சாபில் உள்ள விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு ,தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா ,விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதமளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மத்தியமைச்சரவையில் கூறினர்.
ஆனால்,இந்த மூன்று மசோதா நிறைவேற்ற த்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அவையில் பரபரப்பு நிலவியதன் காரணமாக வாக்கெடுப்பு மூலம் விவசாய சீர் திருத்த மசோதாவை நிறைவேற்றினர்.
இதற்கு விவசாயிகள் தரப்பிலும், அரசியல் கட்சிகளும் தொடர் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா பகுதியை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர் மூலம் பேரணியாக வந்த அவர்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் விவசாய சீர் திருத்த மசோதாவிற்கு எதிர்த்து விவசாயிகளும் ,இளைஞர்களும் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர்.