அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் பெயர்களைத் தவிர அதிமுக தலைமை அலுவலகத்தில் வேறு யார் பெயரையும் குறிப்பிட்டு கோஷம் எழுப்பக்கூடாது என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பண்ணீர்செல்வம் தொண்டர்களுக்கு ஆணை பிறப்பித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று அழைக்கப்பட்டு வந்த ஜெயலலிதா உயிர் எழுந்ததில் இருந்தே கட்சிகள் பல குழப்பங்கள் எழுந்து வருகின்றன. அதன் பின்னர் கட்சியில் இரட்டை தலைமை ஏற்பட்டது. தொடக்கத்தில் கட்சிக்குள் சீரான நிலை இருந்தாலும் கூட போகப்போக கட்சிக்குள் பிளவு பெரியது ஆனது. ஒவ்வொருவரும் மாறி மாறி அறிக்கை விட்டனர். இந்த சூழலில் ஜூன் மாதம் 17ஆம் தேதி நடந்த சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து நேற்று ராயப்பேட்டையில் இருக்கின்ற கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பன்னீர்செல்வம் வருகை தந்திருந்தார். அந்த சமயத்தில் அங்கு கூடியிருந்த பெண் தொண்டர்கள் சிலர் தேனி மாவட்டத்தின் சிங்கமே, தமிழ்நாட்டின் தங்கமே என்று கோஷம் எழுப்பி இருக்கிறார்கள்.கோஷமிட்ட தொண்டர்களை அழைத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோரின் பெயரைத் தவிர வேறு யார் பெயரையும் தெரிவித்து கோஷம் எழுப்ப வேண்டாம் என்று பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கி இருக்கின்றார்.
அத்துடன் அதிமுகவை கைப்பற்றி தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றார். அவருடைய ஆதரவாளர்கள் அதிமுகவில் வந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அதேபோல அதிமுகவில் உறுப்பினராகவோ அல்லது பொறுப்பாளராக இருந்து கொண்டு உரையாற்றிய எல்லோரையும் அந்த கட்சியில் இருந்து நிரந்தரமான நீக்கம் செய்வதற்கு ஆதரவாக நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.