மீண்டும் ஓ.பி.எஸ் இ.பி.எஸ் ஐகோர்ட்டில் ஆஜர்! பரபரப்பில் அதிமுக!

0
162
OPS appears in EPS Court again! AIADMK in excitement!
OPS appears in EPS Court again! AIADMK in excitement!

மீண்டும் ஓ.பி.எஸ் இ.பி.எஸ்  ஐகோர்ட்டில் ஆஜர்! பரபரப்பில் அதிமுக!

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதைத்தொடர்ந்து சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதாக காரணம்காட்டி அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

அதிமுக அலுவலகத்தில் போடப்பட்டுள்ளது சீலை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் பழனிசாமியும் மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும் சென்னை ஐகோர்ட்டில் தனித் தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இதற்கிடையில் பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி தங்களது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தனி நீதிபதி என்.சதீஷ்குமாரிடம் முறையீடு செய்திருந்தார்.

அதையடுத்து நீதிபதி அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்துப்பட்ட வழக்கு என்பதால் இதுதொடர்பாக தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் வாங்கி உரிய நடைமுறைகளை முடித்து, வழக்கமான முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றார். இதற்கிடையில் வழக்குகள் இன்று ஜூலை14ஆம் தேதி  நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசட்டப் படிப்பில் சேர விரும்புவார்களா? இதுவே கடைசி தேதி!
Next articleதிமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் நீக்கம்!