எம்ஜிஆர் நினைவு தினம்! நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் முதல்வர் துணை முதல்வர்!

0
109

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுகவின் தலைவர்கள் இன்று உறுதிமொழியை ஏற்று இருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எம். ஜி .ஆரின் 33 ஆவது நினைவுநாள் இன்றைய தினம் அதிமுக, மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சியினரால் பின்பற்றப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய இல்லத்தில் இருந்த எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தன்னுடைய இல்லத்தில் இருக்கின்ற அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்து இருக்கின்றார்.

இதன் எடுத்து மெரினாவுக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் போன்றோர் அவருடைய நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். நினைவு தின நிகழ்ச்சிக்கு வந்த அனைவரும் கருப்பு உடை அணிந்திருந்தார்கள். அதன் பிறகு பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க அதனை அனைவரும் பின்தொடர்ந்து தெரிவித்தார்கள்.

அதிமுக ஏழை மக்களைப் பாதுகாக்கின்ற எஃகு கோட்டை இந்த மாபெரும் மக்கள் இயக்கத்தை நமக்கு கொடுக்க எம்.ஜி.ஆரின் புகழை எப்போதும் பாதுகாப்போம் தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி என்பதை நினைத்து விடக்கூடாது. என ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் அதற்கு புதிய எழுச்சி அளித்தவர் எம்ஜிஆர். அவர் உருவாக்கிய இந்த உண்மையான ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்று இருக்கிறார்கள்.

தமிழகத்தில் உயரப் பறப்பது அதிமுகவாகத்தான் இருக்க வேண்டும் அது நிலைத்து நிற்கவேண்டும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொடுக்க வேண்டும் அதற்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் அவருடைய வழியிலே மக்களால் நான், மக்களுக்காகவே நான், என்று வாழ்ந்தவர் ஜெயலலிதா. அதன் காரணமாகத்தான் அந்த மனிதர் தெய்வங்களுக்கு மக்கள் மகுடம் சூட்டி இருக்கிறார்கள். அந்த புகழ் மகுடத்தை எதிரிகள் வெற்றி பெற இயலாது. தடுப்பதற்கு விசுவாச தொண்டர்கள் விட மாட்டோம் என உறுதி ஏற்கிறோம் என்று உறுதிமொழி வாசித்திருக்கிறார்கள்.

2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றியை அடைந்து மறுபடியும் ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்து காட்டுவோம் என்று சபதம் ஏற்கின்றோம்.

எம்ஜிஆரின் வாரிசு தான் நான் என்று கமல், அவர்களும் எம்ஜிஆர் உடைய ஆட்சியை கொடுப்பேன் என்று ரஜினிகாந்த் அவர்களும் தெரிவித்திருக்கின்றநிலையில் அவர்களை அதிமுக மிகக் கடுமையாக விமர்சனம் செய்தும் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியும் எம்ஜிஆரின் புகழை தட்டிப்பறித்த விடமாட்டோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஆளும் தரப்பை எச்சரித்த ராமதாஸ்! இறுதி கட்ட போராட்டத்திற்கு தயாரான இளைஞர் படை!
Next articleஉதயநிதியின் சட்டையை பிடித்து அடிக்க சென்ற இளைஞர்கள்! தொடர்ந்து அவமதிக்கப்படும் திமுக