OPS TVK DMK: அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கம் செய்யப்பட்ட பிறகு தனித்து செயல்பட்டு வரும் அவர் பாஜகவுடன் மிகவும் இணக்கமாக இருந்தார். ஆனால் இந்த இணக்கமெல்லாம் அதிமுக அவர்களுடன் கூட்டணி வைக்கும் வரை தான். தற்போது அதிமுக பாஜக கூட்டணி வைத்த பிறகு பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பிரதமரை வரவேற்கவோ பார்க்கவோ கூட பன்னீர் செல்வத்திற்கு அனுமதி வழங்கவில்லை.
ஆனால் என்னிடம் கேட்டிருந்தால் நான் அனுமதி வாங்கி கொடுத்திருப்பேன் என தற்போது நயினார் பதிலத்துள்ளார். அதற்குள் அவர் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார், இது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என கூறி மழுப்பும் பதிலை தான் தற்போது செதியாளர்களுக்கு கூறியுள்ளார். மேலும் திமுக நிர்வாகிகள் ஒரு சிலர் ஓபிஎஸ் உடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில்யிலிருந்து வெளியிடுவதற்கு முன் ஸ்டாலினையும் சந்தித்துள்ளார்.
அரசியல் களத்தில் இந்த நகர்வை சற்று உற்று கவனிக்க வேண்டியுள்ளது. அதேசமயம் புதிய அரசியலமைப்பை விரிவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இவர் இணைய அதிக வாய்ப்புள்ளதாகவும் மறுபுறம் கூறி வருகின்றனர். ஆனால் இது ரீதியாக எந்த ஒரு அறிவிப்பையும் ஓபிஎஸ் தரப்பினர் வெளியிடவில்லை. அதேபோல இவரின் அடுத்த கட்ட நகர்வானது அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை கூட ஏற்படுத்தலாம். இதனால் இவர் யாருடன் கைகோர்க்க போகிறார் என்பது குறித்து பதில் வெளிவரும் வரை அரசியல் களம் சற்று பரபரப்பாகவே காணப்படும்.