Breaking News, Politics, State

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

Photo of author

By Parthipan K

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவருக்கு வயது 95. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியாருக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்கு சென்று அவரது தாயாரை பார்த்து வந்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்!

ஊராட்சித் துறையில் 97 காலிப்பணியிடங்கள்; ரூ.1.25 லட்சம் சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!!