OPS BJP: அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததில் இருந்து பன்னீர்செல்வத்தை கண்டு கொள்வதில்லை. மத்திய மந்திரி அமித்ஷா பிரதமர் மோடி என பலரும் தமிழகம் வருகை புரிந்து இருந்த போது பார்க்க நேரம் கேட்டும் தரவில்லை. அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் பன்னீர்செல்வத்தை கூட்டணியில் ஏற்றுக்கொள்ள மாட்டேன் நீங்கள் வற்புறுத்தவும் கூடாது என்ற கட்டளையை கூட்டணிக்குள் வைத்துள்ளாராம்.
இதனால் பாஜக ஓபிஎஸ்-ஐ ஒரு அடி தள்ளி வைத்து பார்த்து வருகிறது. இதுவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்பு, பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை விலக்கி கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை கூட்டமானது இன்று நடைபெற்றது.
அந்த வகையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அணி விலகி விட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், நாளடைவில் யாருடன் கூட்டணி வைப்போம் என்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மக்களை சரியான வழியில் எடுத்துச் செல்லும் கட்சியுடன் தான் கூட்டணி என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அப்படி பார்க்கையில் இன்று பன்னீர்செல்வம் இது ரீதியான முடிவை அறிவிப்பதற்கும் முன் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இது அரசியல் களத்தில் அடுத்த கட்ட தேர்தல் வியூகமாக பார்க்கப்படுகிறது.