அதிமுக இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் இபிஎஸ் யாருக்கு கிடைக்கும் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரும் ஜனவரி 13 ஆம் தேதி இதற்கான முடிவு தெரிந்துவிடும். அதிமுக கட்சியினை முழுமையாக எடப்பாடி தனக்கென்று கொண்டு வந்த பிறகு ஓபிஎஸ் உட்பட மூவரை கட்சியை விட்டு நீக்கம் செய்தார். இதனால் கட்சி இரண்டாக உடைய நேரிட்டது டன் அதன் வாக்குகளும் சிதறியது. மீண்டும் கட்சியில் இவர்களை சேர்க்கலாம் என்று பலரும் பரிந்துரை செய்த பெயரில் எடப்பாடி அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கவில்லை.
இவ்வாறு இருக்கும் போது தான் பொதுக்குழு கூட்டம் நடத்தி நிர்வாகிகளில் ஒரு பான்மையாக எடப்பாடி பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இது செல்லாது என்று உச்சநீதிமன்றம் வரை வழக்கு தொடுத்தும் பயனளிக்கவில்லை. இவ்வாறு இருக்கும்போது ஈரோடு இடைத் தேர்தல் வந்ததையொட்டி இரட்டை இலை சின்னமானது எடப்பாடிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் ஆணையிட்டது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தான் உட்கட்சி வழக்குகள் நிலுவையில் இருக்கும் பொழுது எப்படி ஒரு மனே இரட்டை இலையை எடப்பாடிக்கு ஒதுக்க முடியும் எனக் கோரி மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை செய்து தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேற்கொண்டு இரு தரப்பு வாதத்தையும் கேட்டு தங்கள் கருத்தை தெரிவிக்கும் படி சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சில வரைமுறை திட்டங்கள் அதிமுக சாசனத்திற்கு எதிராக எடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனால் ஓ பன்னீர் செல்வம் நீக்கம் செய்யப்பட்டது செல்லாது எனக் கூறியுள்ளனர். இவ்வாறு பார்க்கும் பொழுது அவருக்கும் கட்சி ரீதியான முழு உரிமை உள்ளது.
அதனால் இரட்டை இலை அவருக்கு செல்ல அதிகப்படியான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறுகின்றனர். இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் பக்கம் செல்லும் பட்சத்தில் சசிகலாவுடன் இணைந்து அதிமுக-வை கைப்பற்றி சட்டமன்ற தேர்தலை சந்திக்கலாம்.