ADMK BJP: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்தாலும் வரையறுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் தான் செயல்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக முதலில் கூட்டணி வைப்போம் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தை கைக்குள் வசப்படுத்திக் கொள்வோம் என்று எண்ணி வருகிறதாம். அந்த வகையில் முதலில் எடப்பாடி போட்ட கண்டிஷனுக்கெல்லாம் சரி என்று சொல்லிவிட்டு தற்பொழுது அவர்கள் நிர்வாகிகளை வைத்து அவரின் மனதை மாற்றி வருகிறார்களாம்.
அதன் வெளிப்பாடுதான் தினகரன் மீது கொடுக்கப்பட்ட வழக்கை எடப்பாடி வாபஸ் பெற்றது. பாஜக சிறு கட்சிகளை கூட தங்கள் வசம் வைத்து 2026 தேர்தலை திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அதனால்தான் அதிமுக விடம் பணிந்து நடந்து கொள்கிறது. இதனின் அடுத்த கட்ட டார்கெட் சீமான் மற்றும் இதர சிறு கட்சிகள் எனக் கூறுகின்றனர். அதன்படி அதிமுக வாக்குகளை சிதறவிடாமல் இருக்க ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை உள்ளிழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
முதலில் முடியவே முடியாது என கூறிய எடப்பாடி, தற்பொழுது உங்கள் நிர்வாகிகளை அதுவும் தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உங்களுக்கு எதிராக திரும்பும் படி ஓபிஎஸ் உடன் இணக்கத்தில் உள்ளனர். இப்படி கூட்டணியில் கட்சி சேர்ந்த பிறகு, மூத்த நிர்வாகிகள் வெளியேறும் நிலை வந்தால் கட்சிக்கு தான் சேதாரம். அதனால் கட்சியை கட்டுக்குள் வைக்க கட்சியை விட்டு நீக்கிய முன்னால் நிர்வாகிகளுடன் மீண்டும் சமரசம் பேசலாம் என கூறியுள்ளனர்.
ஆனால் எடப்பாடி சிறிது காலம் போகட்டும் என கூறியுள்ளாராம். வரும் நாட்களில் எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன், சசிகலா உள்ளிட்டோர் இணைவது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். பாஜக நேரடியாக ஆர்டர் போட்டால் அதிமுக கேட்காதென்று அவர் நிர்வாகிகளை வைத்தே பொம்மலாட்டத்தை தொடங்கியுள்ளது.