பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி! வெகுண்டெழுந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடியாக சோதனை செய்தது இதில் பலர் சிக்கி இருக்கிறார்கள். இதனால் முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் தற்போது மெல்ல, மெல்ல திமுக பக்கம் சாய்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

சட்டசபையிலும் கூட திமுகவிற்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது, இதனால் அதிமுகவினர் ஓபிஎஸ் அவர்கள் மீது மிகுந்த கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பயின்று வந்த ஸ்வேதா என்ற மாணவி நேற்று மதியம் கல்லூரி முடிந்து வெளியே வந்த சமயத்தில் அவரை பார்ப்பதற்காக ராமச்சந்திரன் என்பவர் கல்லூரி அருகே காத்திருந்தார். இருவரும் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்கள். இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்படவே அந்த சமயத்தில் ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவை சரமாரியாக குத்தியதுடன் தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனை தொடர்ந்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சூழ்நிலையில், ஸ்வேதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ராமச்சந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் தமிழகத்திலேயே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ் நேற்றைய தினம் வெளிப்படுகின்ற ஒரு அறிக்கையில் தமிழகத்தில் கடந்த 10 தினங்களாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி இருக்கின்றார். நேற்றைய தினம் அவர் அறிக்கை வெளியிட்டு இருக்கின்ற சூழ்நிலையில், தாம்பரம் தனியார் கல்லூரி மாணவி ஸ்வேதா தாம்பரம் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் குத்தி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து துயரமும், மன வேதனையும், அடைந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அவர் தெரிவித்திருக்கிறார். பெண்களிடையே இதுபோன்ற சம்பவம் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு காரணமாக, இருந்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவருக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர காவல்துறை விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனவும், மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட ஸ்வேதாவின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கின்ற ஒரு அறிக்கையில் தமிழ்நாட்டில் கடந்த 10 தினங்களாக நடந்து வந்த கொலை சம்பவங்களை பட்டியலிட்டு இருந்தார். முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் தனி கவனம் செலுத்தி அதனை சரிசெய்ய வேண்டும் இதுபோன்ற சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபடும் வரை இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும். கொலை குற்றங்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அந்த அறிக்கையின் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ்.