இடைத்தேர்தலில் ஓபிஸ் ஆதரவு வேட்பாளர் வேட்புமனு வாபஸ்..!

0
343

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ உயிரிழந்ததை அடுத்து ஈரோட்டில் இடைத்தது அறிவிக்கப்பட்டது. திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளராக ஈவிகேஸ்.இளங்கோவனை அறிவித்திருந்தது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தென்னரசுவையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் வரையும் வேட்பாளராக அறிவித்தனர்.

இரு தரப்பினரும் வேட்பாளர் அறிவித்ததால் அவர்களின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி எழுந்ததை அடுத்து, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், தென்னரசு வேட்பாளராக ஏற்பது குறித்து அவை தலைவர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பினார். இதனை ஓபிஎஸ் சிறப்பு கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், அவர்களின் தரப்பு வேட்பாளர் செந்தில் குமார் இன்று வேற்றுமணியை வாபஸ் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் தரப்பு ஆதரவாளர் கூட்ட கிருஷ்ணன் தெரிவிக்கையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படக்கூடாது என்பதற்காகவே வாபஸ் பெற்றோம் எனவும் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால் தென்னரசுருக்கு வாக்கு சேகரிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

Previous article தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்! 
Next articleஇபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவா? அதிமுக அவைத் தலைவர் பரபரப்பு கடிதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here