ADMK: அதிமுக ஆவணத்தின் அடிப்படியில் இரட்டை இலை சின்னம் தனது தான் சொந்தம் என பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுக இரட்டை இலை சம்பந்தமான வழக்கு குறித்த வழக்கை நான்கு வாரங்களுக்குள் முடிக்குமாறு உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் என இருவரும் நேரில் ஆஜராகி பதிலளித்தவுடன், தங்கள் கருத்தை எழுத்து பூர்வமாகவும் தாக்கல் செய்துள்ளார். அதில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தவிர வேறு எந்த ஒரு முடிவுகளையும் தேர்தல் ஆணையத்தால் எடுக்க முடியாது என கூறியுள்ளார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள பதில் மனுவில், கட்சி ரீதியான தலைமை பொறுப்பிலிருந்து எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் தொடர் ஐந்து வருடத்திற்கு செயல்பாட்டில் இருக்கும் பட்சத்தில் அதனை திடீரென்று மாற்றம் செய்ய இயலாது.
இவ்வாறு கட்டுப்பாட்டு வரையறை இருக்கும் போது தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது. மேற்கொண்டு உட்கட்சி பூசல் இருக்கும்பொழுது அதன் வழக்குகள் நிலுவையில் தான் உள்ளது. இச்சமயத்தில் தேர்தலை மீறி இரட்டை இலையை எடப்பாடி பயன்படுத்துவது அதிகாரமற்ற செயல். அதனால் இனி வரும் நாட்களில் சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது எனக் கூறியுள்ளார்.
மேலும் வழக்குகள் குறித்து முடிவு வரும் வரை எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்குள் உள்ள அதிகாரம் அனைத்தையும் நீக்க வேண்டும். அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் பொறுப்பை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தற்பொழுது என்னை கட்சியிலிருந்து நீக்கியது விதிமீறலுக்கு அப்பாற்பட்டது. மேற்கொண்டு அதிமுக ஆவணத்தின் வரைமுறை கேற்ப இரட்டை இலை சின்னம் தனக்கு தான் சொந்தம் என்று குறிப்பிட்ட கேட்டுள்ளார்.