பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்திய ஓ.பி.எஸ் !!

Photo of author

By Parthipan K

பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்திய ஓ.பி.எஸ் !!

Parthipan K

பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்திய ஓ.பி.எஸ் !!

பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்குமாறு திமுக அரசை ஓ. பன்னீர் செல்வம் அவர்களை வலியுறுத்தியுள்ளார்.

நம் தமிழ்நாட்டில் நெல், கரும்பு ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படுவது போல, தேயிலை, எண்ணெய் வித்துகள், தோட்டக்கலை விளைபொருள்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆனால், திமுக ஆட்சி அமைக்கப்பட்டு 28 மாதங்கள் கடந்த நிலையில், பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஏதும் நிர்ணயம் செய்யப்பட வில்லை. இதனால் ஆதார விலை வழங்கக் கோரி நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். பல மாதங்களாக ஜெயிலு தொழிலாளிகள் மற்றும் டெய்லி விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு இது குறித்து பொதுவான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த “ஊட்டி டீ விற்பனையில்கூட தற்போது முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பல இடங்களில் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

தமிழ்நாடு அரசு இதில்  உடனடிக் கவனம் செலுத்தி பசுந்தேயிலைக்கான யதார்த்தமான குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டுமென தமிழக முன்னாள் முதலமைச்சர் ஆன ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை தேயிலை விவசாமிகளுக்கு கிடைக்கவும், மத்திய அரசிடமிருந்து மானியத்தை பெற்றுத்தரவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

தேயிலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்த தோழர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் இருந்தும், அவர்களின் போராட்டம் குறித்து, திமுக அரசு உரிய நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.