ஒரே நேரத்தில் தெரிந்த 3 சூரியன்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

0
150

ஒரே நேரத்தில் தெரிந்த 3 சூரியன்கள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

அண்டத்தில் கோள்கள் எத்தனை இருந்தாலும், இன்னும் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும் சூரியன் என்பது ஒன்றுதான் என்பதே இன்று வரை உள்ள நிலவரம். இந்த நிலையில் சீனாவின் ஒரு பகுதியில் ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள் தெரிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சீனாவில் உள்ள ஜின்ஜியாங் என்ற மாகாணத்தில் உள்ள கோர்காஸ் என்ற நகரத்தில் நேற்று இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. சூரியன் உதித்த சில நிமிடங்களில் திடீரென இரண்டு சூரியன்கள் தெரிந்ததைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்ட நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் 3வது சூரியனும் வானில் தெரிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வானியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தப்போது சூரியனின் ஒளி ஈரப்பகுதியை ஊடுருவிச் செல்லும்போது வானில் இருக்கும் பனித்துகள்களின் மீது பட்டு பிரதிபலிப்பதாகவும், இதனால் தான் இரண்டு, மூன்று சூரியன்கள் போல் தெரிந்ததாகவும், அரிதாக இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் என்றும் ஆனால் ஒரே சூர்யன் தான் என்றும் விளக்கமளித்தனர். பனிப்பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கும் என்றும் ஆனால் ஜின்ஜியாங் போன்ர பனி குறைவான பகுதியில் நடப்பது இதுதான் முதல்முறை என்பதால் அந்த பகுதி மக்களுக்கு இதுவொரு அதிசய நிகழ்வாக தெரிந்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Previous articleபாமக பிரமுகரை கொன்றவர்களை பற்றி துப்பு கொடுத்தால் 1 லட்சம் சன்மானம்! NIA
Next article44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு!