இந்த மாநிலத்திற்கு ஆரஞ்சு அலார்ட்! மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Photo of author

By Rupa

இந்த மாநிலத்திற்கு ஆரஞ்சு அலார்ட்! மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

ஆரஞ்சு அலார்ட் என்று  வானிலை ஆய்வு மையம் கூறினால் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது அர்த்தம். அந்தவகையில் டெல்லி ஹரியானா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது.அதேபோல இன்று டெல்லியில் அதிகாலை இரண்டரை மணி முதல் 5 மணி வரை இடைவிடாது மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளனர்.மேலும் டெல்லி சப்தர்ஜங் பகுதியில் 74.2 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆசாத் மார்க்கெட் பகுதியில் கனமழை பெய்ததால் 1.5 அடி அளவுக்கு நீர் தேங்கி உள்ளது தற்போது அப்பகுதியில் 1.5 அடிக்கு நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து ஏதும் அவ்வழியே செல்ல முடிவதில்லை.அதனால் அப்பகுதியை தற்காலிகமாக மூடி உள்ளனர்.இப்பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியில் நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து போலீசார் அப்பகுதிகளை தற்காலிகமாக மூடி உள்ளனர்.அதுமட்டுமின்றி டெல்லியின் பிரகதி மைதான் லஜ்பத் நகர் மற்றும் ஜங்க் பகுதிகளில் அதிக அளவு மழை பெய்து உள்ளது.

இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் அப்பகுதியில் இடையே பாதிப்படைந்து காணப்பட்டுள்ளது.ஆசாத் பகுதியைப் போலவே மூல்சந்த் பகுதியிலும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் நீரினுள் மூழ்கிய படியே செல்கின்றனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.மற்ற இடங்களைப் போலவே மீண்டும் பிரிட்ஜ் பகுதியிலும் அதிக அளவு நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர்.

டெல்லியில் இவ்வாறு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சில நாட்களாக வெளுத்து வாங்கும் மமழையிலிருந்து இன்று சற்று குறைவான அளவிலே மழை பெய்யும் என அறிவித்துள்ளனர். இந்த வெளுத்து வாங்கும் மழையினால் சில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் காணப்படுகிறது.அதனால் பல இடங்களில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர் .பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது மிகவும் தாழ்வான பகுதிகளிலும் அதிக சேதம் உண்டாகி உள்ளது.