DMK: விஜய் அரசியலுக்கு வந்து கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சியில் அதிகாரம் என கூறியதை அடுத்து, இவர்களுடன் அதிமுக இணைந்து விடும் என்று பேச்சு அடிபட்டது. இதனை காரணமாக வைத்து திமுகவின் கூட்டணி கட்சிகள் அதன் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக, விடுதலை சிறுத்தை திருமா இதனை வெளிப்படையாகவே கேட்க ஆரம்பித்தார்.
அதிலும் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டுமென்று டிமாண்ட் கொடுத்து வருகிறார். இவர் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியும், திமுக கூட்டணியின்றி வெற்றி பெற்று விடலாம், நமக்கென தனி அதிகாரம் வேண்டும் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர். ஒரே கட்டமாக திமுக தலைமைக்கு அனைத்து தரப்பிலிருந்து பிரஷர் வர ஆரம்பித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணமாக விஜய்யுடன் எடப்பாடி கூட்டு என்ற பேச்சு தான்.
தற்சமயம் கூட்டணி இல்லை என்று தெரிந்தவுடன், திமுகவின் கூட்டணி கட்சிகள் வைத்த டிமாண்டுக்கு திமுக முடியாது என்கின்ற பதிலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உங்களுக்கு வழக்கம் போல் வழங்கப்படும் தொகுதிகள் தான் கிடைக்கும் என்ற ஆர்டரை போட ஆரம்பித்து விட்டனர். இதனால் திமுக கூட்டணி சார்ந்த அனைவரும் சற்று அதிருப்தியில் உள்ளனர்.