வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தமிழக உயர்கல்வித் துறை அதிரடி உத்தரவு! தகர்ந்தது ஸ்டாலின் கனவு!

Photo of author

By Sakthi

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக தீவிரமாக போராடி வந்தது.ஆனால் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சிகள் எதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.

இந்நிலையில், எண்பதுகளின் இறுதியில் எல்லாம் தமிழகம் முழுவதும் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு மிகத் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்ததாக சொல்கிறார்கள். எவ்வளவுதான் தீவிர போராட்டங்களை மேற்கொண்டாலும் ஆளும் கட்சிகள் அதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை இதனால் வன்னியர்கள் சற்றே மனம் தளர்ந்து தான் போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.போதாக்குறைக்கு 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி இந்த இட ஒதுக்கீடு கேட்டு போராடிய 21 வன்னியர்களை அப்போதைய மாநில அரசு சுட்டுக் கொன்றது. இது தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்த தேர்தலில் அமைந்த திமுக ஆட்சிக்காலத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிறோம் என்ற பெயரில் சுமார் 108 ஜாதிகளை ஒன்றிணைத்து ஒரு பட்டியலை உருவாக்கி அந்தப் பட்டியலில் இருக்கின்ற ஜாதிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. அப்போதைய திமுக அரசு ஆனால் திமுக அளித்த இந்த 20 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு எந்த வகையிலும் பலன் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டது அப்போதைய கருணாநிதியின் திமுக அரசு இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் பல்வேறு சாதிகள் ஒன்றிணைந்து இருந்ததால் வன்னியர் இன மக்களால் அந்த இடத்தினை முழுவதுமாக பெற முடியவில்லை. அதன் காரணமாகவே இன்றும் அரசு வேலைகளில் வன்னியர்களின் இடம் குறைவாக தான் இருக்கிறது.

இந்த நிலையில்தான், கடந்த சில மாதங்களாக வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது.இதனைத் தொடர்ந்து, ஆளும் கட்சியான அதிமுகவுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உண்டான உடன்படிக்கையின்படி தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், உள்ளிட்ட பலர் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அதனால் நீதிமன்றம் வரையில் சென்று வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சி எதுவும் பலிக்கவில்லை அதனால் விரக்தியில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதேநேரம் தற்போது வழங்கப்பட்டிருக்கும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானதுதான் எனவும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்த பின்னர் அந்த இட ஒதுக்கீடு கூடவோ அல்லது குறையவோ செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், உயர் கல்வியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்க தமிழக உயர்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது.

அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இனிவரும் காலங்களில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணை அடிப்படையில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.