பக்தர்க்கு ரூ 45 லட்சம் நஷ்ட ஈடு வழங்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு உத்தரவு! உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு !
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரம் தோறும் வெள்ளிகிழமையன்று அபிஷேகம் செய்வது வழக்கம். அப்போது அபிஷேகத்திற்கு பிறகு புதிய வஸ்திரம் சமர்பிக்கப்படும். இந்த சேவையில் இரண்டு பேர் பங்கேற்பதற்காக சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி திருப்பதி தேவஸ்தானத்திற்கு 12,250 ரூபாய் செலுத்தி பதிவு செய்துள்ளார்.
மேலும் அவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு 7ஆம் தேதி தரிசனம் செய்ய தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கோவில்களிலும் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. அதனையடுத்து திருப்பதியிலும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
அதனால் முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவருக்கும் முன்னதாக அறிவிக்கப்பட்ட தேதிகளுக்கு பதிலாக வேறு விஐபி தரிசனத்தில் அனுமதி வழங்கப்படுவதாகவும் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் அனைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் 16 ஆண்டுகள் முடிந்த நிலையில் இன்னும் அதற்கான தேதி அனுப்பப்படவில்லை எனவும் தேவஸ்தானத்தில் குறைபாடு இருபதாகவும் சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 45 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து உயர்நீதி மன்றத்தில் திருப்பதி தேவஸ்தானம் மேல்முறையீடு செய்வதாகவும் அறிவித்துள்ளது.