செந்தில்பாலஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்.. மத்திய அரசிடம் இருந்து வந்த பிரஷர்!! விழிப்பிதுங்கும் கட்சி தலைமை!! 

Photo of author

By Rupa

செந்தில்பாலஜிக்கு ஒரேடியா லாக்கப் தான்.. மத்திய அரசிடம் இருந்து வந்த பிரஷர்!! விழிப்பிதுங்கும் கட்சி தலைமை!!

ஒரு வாரத்திற்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இதில், அவரது நண்பர்கள் வீடு என தொடங்கி சகோதரர் வீடு வரை அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக அவரது சகோதரர் வீட்டை சோதனையிட முயன்ற போது வீடு பூட்டி இருந்த காரணத்தினால் வருமானவரித்துறையினர் அங்கிருந்த சுவரின் மேல் ஏறி குதித்து உள்ளே சென்று மேற்கொண்டு தங்களது நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறு வருமான வரித்துறை அதிகாரிகள் செய்ததால் அங்கிருந்த திமுக உறுப்பினர்கள் வருமான வரித்துறையினரை சூழ்ந்து கொண்டனர். அதுமட்டுமின்றி இருவருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.இந்த வாக்குவாதம் ஆனது உச்சகட்டத்திற்கு சென்று கைகலப்பில் முடிந்தது.இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வருமான வரித்துறையினர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்ததால், ராணுவ வீரர்கள்மூலம் சோதனை முடியும் வரை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி வருமானவரித்துறையை தாக்கிய திமுக உறுப்பினர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கையோடு அவர்களுக்கு ஜாமீனும் கிடைத்துவிட்டது. இதனால் வருமானவரித்துறையினர் அவர்கள் மீது மேல் முறையீடு வழக்கு தொடுத்துள்ளனர். அதேபோல இந்த சோதனையில் கணக்கிற்கு வராத பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து தங்களது கடமைகளை செய்ய வந்த அதிகாரிகளை இவ்வாறு தாக்குவதா என எதிர்க்கட்சி தலைவர் முதல் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வரிசையில் மத்திய அரசும் இவ்வாறு அதிகாரிகளை தாக்கியது குறித்து தக்க பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு தற்பொழுது வரை மத்திய அரசுக்கு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை.

முன்னதாகவே செந்தில் பாலாஜி மீது பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், அதனை மறைக்கத்தான் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பிரச்சனை முடிவதற்குள் அடுத்த கட்ட பிரச்சனையாக அவருக்கு மத்திய அரசின் இந்த கடிதம் உள்ளது.

கூடிய விரைவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அமலாக்கத்துறை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணமாகவே உள்ளது. அவ்வாறு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் கைது செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.