சாவுற வயசுல மூணு பொண்டாட்டியா!! அனாதையாக உயிரிழந்த குடிமகன்!!

Photo of author

By Parthipan K

சாவுற வயசுல மூணு பொண்டாட்டியா!! அனாதையாக உயிரிழந்த குடிமகன்!!

Parthipan K

Orphaned deceased citizen !!

சாவுற வயசுல மூணு பொண்டாட்டியா!! அனாதையாக உயிரிழந்த குடிமகன்!!

மேச்சேரி அருகே பானாபுரம் ஊராட்சி வீரப்பனூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவருக்கு வயது 70. இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகி உள்ளது. மூன்று முறை திருமணம் ஆகியும் ஒரு மனைவி கூட அவருக்குத் துணையாக இல்லை. தனியாகவே தன்னைப் பார்த்துக் கொண்டார். தானே சமைத்துக் கொண்டும் தன் உடைகள் அனைத்தையும் துவைத்து கொள்வார்.

இவர்களுக்கு பிள்ளைகளும் எவரும் இல்லை. இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமை ஆனவர்.அடிக்கடி குடித்துவிட்டு தெருவில் கிடப்பார். போதை தலைக்கேறிய நிலையில் விஷம் என்று தெரியாமல் மதுவை குடித்துள்ளார். சம்பவத்தன்று அவரது  வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். குடி போதையில் மயங்கி உள்ளார் என்று கூறிய சிலர் அவரை எழுப்பி பார்த்தார்கள்.

பேச்சு வராத நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் திடீரென்று நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மேச்சேரி காவல்துறையினர் வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.