ஒற்றை தலைவலியால் பிரச்சனையா? அதை சரி செய்ய இதோ எளிமையான டிப்ஸ்!

Photo of author

By Sakthi

நம்மில் அனைவருக்கும் ஒற்றை தலைவலி பிரச்சனை இருக்கும். அதாவது தலையின் வலது அல்லது இடது பக்கம் என்று இரண்டு பக்கங்களில் எதாவது ஒரு பக்கம் மட்டும் தலை வலிக்கும். இந்த ஒற்றை தலைவலி பிரச்சனை நீக்க எளிமையான டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* தேன்

* அதிமதுரம்

* சுக்கு

செய்முறை:

ஒரு மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் அதிமதுரம் மற்றும் சுக்கு இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து நன்றாக அரைத்து பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் அரைத்து வைத்துள்ள இந்த பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை அப்படியே சாப்பிட வேண்டும். இதை செய்தால் ஒற்றை தலைவலி விரைவில் குணமாகும்.