BJP: தமிழகத்தின் புதிய பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றதை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர். அதன்படி நேற்று சென்னையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜகவின் முக்கிய தலைகள் பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய முன்னாள் துணை மேயர் ஆன கராத்தே தியாகராஜன் அண்ணாமலை வைத்து திமுகவில் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
இது திமுக காரர்களை மட்டுமின்றி பாஜக அண்ணாமலை விசுவாசிகளுக்கும் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் பாஜக தலைவராக பொறுப்பேற்றதும் ஸ்டாலினே உங்களை பாராட்டியுள்ளார். பல்வேறு தலைவர்கள் உங்கள் காலில் விழுவதுண்டு. அதிலும் குறிப்பாக திமுக அமைச்சர்களை மட்டும் நம்பி விடாதீர்கள். ஒருபோதும் அண்ணாமலை போல அவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கக் கூடாது என பேசியிருந்தார். ஒரு பக்கம் திமுகவை விமர்சனம் செய்திருந்தாலும், தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் அண்ணாமலையையும் போட்டு தாக்கியுள்ளார்.
மேற்கொண்டு நயினார் நாகேந்திரன் பதவியேற்றுள்ளதால் முக்கிய நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணாமலை இருந்த நாட்களில் யாரெல்லாம் தலைமைக்கு மரியாதை அளிக்கவில்லையோ அவர்களையெல்லாம் கூண்டோடு கட்சியை விட்டு நீக்க உள்ளாராம். மேற்கொண்டு தென் தமிழகத்தில் பாஜக கொடி மேலோங்க தங்கள் சாதியை சேர்ந்தவர்களை நியமிக்க உள்ளாராம். அதேபோல அண்ணாமலை பதவியிலிருந்த போதிலிருந்து பூத் கமிட்டி அமைப்பது ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதே தவிர அமைக்க முடியவில்லை. இதனால் இம்முறை வரப்போகும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டி அமைக்க ஆலோசனை செய்து வருகிறாராம்.