கட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!

Photo of author

By Sakthi

கட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!

Sakthi

Updated on:

கட்டுக்குள் வராத கலவரம்! மேயர் வீட்டின் மீது எரியும் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்திய கலவர கும்பல்!!

 

பிரான்ஸ் நாட்டில் 5வது நாளாக தொடர்ந்த கட்டுக்கடங்காத கலவரத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி சனிக்கிழமை இரவு கலவர கும்பல் மேயர் வீட்டின் மீது பற்றி எரியும் காரைக் கொண்டு தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள புகா பகுதியின் நான்டேனில் நகரில் சொல்லும் பேச்சை கேட்கவில்லை என்ற காரணத்திற்காக 17 வயது உள்ள சிறுவன் நாஹேல் என்பவரை போலிஸார் துப்பாக்கியால் சுட்டதில் அச்சிறுவன் கடந்த வாரம் ஜூன் 27ம் தேதி செவ்வாய்க் கிழமை உயிரிழந்தார். இதையடுத்து 17 வயதுடைய சிறுவனை துப்பாக்கியால் சுட்டதை கண்டித்நு பிரான்ஸ் நாடு முழுவதும் கலவரம் வெடிக்கத் தொடங்கியது.

 

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே அரபு நாட்டை சேர்ந்தவர்களையும் மற்றும் கருப்பினத்தவர்களை குறிவைத்து பிரான்ஸ் நாட்டு காவல் துறையினர் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகின்றது.  இந்நிலையில் அரபு நாட்டின் ஒரு பகுதியான அல்ஜீரியாவை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் நஹேல் அவ்ரகளை சுட்டுக் கொலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமாக தொடங்கி தற்போது கட்டுக்கடங்காத கலவரமாக 5வது நாளாக நடந்து கொண்டிருக்கின்றது.

 

பாரிஸ் நகரின் எல்சீஸ் என்ற பகுதியில் கடந்த சனிக்கிழமை அதாவது ஜூலை 1ம் தேதி இரவு கலவரக்காரர்கள் ஒன்று கூடினர். இதையடுத்து கலவரக்காரர்கள் அங்குள்ள கார்களுக்கு தீ வைத்தல், கடைகளை சூறையாடுதல், பொருள்களை அடித்து நொறுக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

 

பிறகு அங்குள்ள மேயர் வீட்டின் மீதும் கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அங்குள்ள மேயர் வின்சென்ட் ஜின்ப்ரூன் அவர்களின் வீட்டின் மீது தீப்பற்றி எரியும் காரைக் கொண்டு கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கலவரக்காரர்கள் மேயர் வீட்டின் மீது நடத்திய தாக்குதலில் மேயர் வின்சென்ட் ஜின்ப்ரூன் அவர்களின் மனைவி, குழந்தை இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் கலவரக்காரர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

இதையடுத்து வன்முறை, சூறையாடல் மற்றும் பிற சம்பவங்கள் தொடர்பாக  கடந்த சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக் கிழமை வரை அதாவது ஜூலை 1ம் தேதி முதல் 2ம் தேதி வரை கலவரங்களில் ஈடுபட்ட 719 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

சிறுவன் நஹேலின் உயிரிழப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கலவரங்களில் ஈடுபட்ட 3000க்கும் மேற்பட்டோர்களை பிரான்ஸ் நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.