நடிகை ஓவியா முதல் முறையாக பிகினி உடையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

Photo of author

By CineDesk

நடிகை ஓவியா முதல் முறையாக பிகினி உடையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
கடந்த 2010 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல் ஹீரோவாக நடித்த ‘களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா. அதையடுத்து அவர் பல படங்களில் நடித்தார். தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார்.என்னதான் வெள்ளித்திரை மூலமாக புகழ் பெற்றிருந்தாலும் அதிக அளவில் பேரும் புகழையும் தேடித் தந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
Oviya Helen Latest Bikini Photos-Latest Tamil Cinema News
Oviya Helen Latest Bikini Photos-Latest Tamil Cinema News
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அங்கு நடந்த கஷ்டங்களுக்கு ஆறுதலாக சமூக வலைத்தளங்களில் அவருக்கென தனியாக ஓவியா ஆர்மி என அமைத்து அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஓவியாவுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் எண்ணிக்கையானது அதிகரித்தது.
Oviya Helen Latest Bikini Photos-Latest Tamil Cinema News
Oviya Helen Latest Bikini Photos-Latest Tamil Cinema News
இதனையடுத்து அவர் மேலும் அடுத்ததடுத்த படங்களில் தொடர்ந்து பிசியாக நடிக்க ஆரம்பித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை ஓவியாவுக்கு ஆதரவாக ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியது.அதேபோல ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது , தன்னுடைய சகப்போட்டியாளரான ஆரவ்வை காதலித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த காதல் தோல்வியடைந்த நிலையில் தற்கொலை முயற்சி செய்து பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு அவர் வெளியேறினார்.
Oviya Helen Latest Bikini Photos-Latest Tamil Cinema News
Oviya Helen Latest Bikini Photos-Latest Tamil Cinema News
இந்த சம்பவமானது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஓவியா ரசிகர்கள் மனதை பெரிதும் ஈர்த்திருந்தார். அதேநேரத்தில் சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த ’90 எம்.எல்.’ திரைப்படம் அதுவரை அவருக்கு இருந்த ஆதரவை கெடுத்து கெட்ட பெயர் வாங்கித் தந்து விட்டது.
இதனைத்தொடர்ந்து அண்மையில் அவர் நடிப்பில் காஞ்சனா 3 படம் வெளியானது. மேலும் தற்போது நடிகை ஓவியா ‘களவாணி 2’, ‘ராஜபீமா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், முதன் முறையாக நடிகை ஓவியா OTT தளத்திற்கு வந்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் பிகினி உடையில் படு கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சாதாரணமாகவே OTT என்றாலே அப்படி இப்படியான பலான காட்சிகள் இருக்கும் படங்கள் தான் ஓரளவு வெற்றி பெறுகின்றன, அதனால், பெரும்பாலான இயக்குனர்களும் அப்படியான காட்சிகளையே தொடர்ந்து படத்தில் வைத்துள்ளார்கள்.
இயக்குனர்களை போல ஹீரோயின்களும் அதற்கேற்றார் போல இந்த விவகாரத்தில் தங்களை வளைத்து கொடுக்கிறார்கள். அந்த வகையில், நித்யா மேனன், அமலாபால், ரெஜினா, ராஷி கண்ணா வரிசையில் தற்போது ஓவியாவும் இணைந்து கவர்ச்சியில் கலக்க போகிறார்.