அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்ன! விளக்கினார் முக்கிய புள்ளி!

0
171

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்ற கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறது .அதே போல ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 76 இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், முக்கிய பிரமுகர்களும், வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பார் சிதம்பரம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலின் திறம்பட ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். மத்திய அரசின் அதிகார பலம், பணபலம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர், உள்ளிட்டோர் இணைந்து தொடர்ச்சியாக கொடுத்து அந்த தொந்தரவை எதிர்த்து தன்னந்தனியாக போராடி மிகப்பெரிய வெற்றியை அடைந்த மம்தா பானர்ஜி அவருடைய கட்சியினர் உள்ளிட்டோருக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் இல்லாவிட்டாலும் இரண்டாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் சிறப்பாக பணிபுரிந்து மிகப்பெரிய சவால்களுக்கு இடையே நல்ல தொகுதிகளைப் பெற்று இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் பார் சிடம்பரம்.

அதேபோல காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் கேரளாவில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதை நாங்கள் மறுக்கவில்லை ஆனால் வாக்கு வித்தியாசம் என்பது 0.8% ஆக தான் இருக்கிறது காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் தேர்தல் செயல்பாடுகளில் குறைவாகவோ அல்லது எதிராகவோ செயல்படுபவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதா கட்சியின் சீடராக மாறி விட்டார்.அதுவே அவருடைய கட்சியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம் ஆகியிருக்கிறது. விவசாயிகள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்காமல் தங்களுடைய போராட்டத்தை முடித்துக் கொள்ளும் போது இல்லை வேளாண் சட்டங்களை விலக்கிக்கொண்டு விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை கலந்தாலோசித்து விவசாயிகளுக்கு தேவையான புதிய சட்டம் கொண்டு வந்தால் அதனை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ப. சிதம்பரம்

Previous articleதூக்கில் தொங்கிய முதியவர்! கொரோனாவின் உச்சகட்ட அவலம்!
Next articleகமல் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முக்கிய நபர்!