பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கடுமையாக சாடிய ப.சிதம்பரம்!

Photo of author

By Parthipan K

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாயத் துறை சார்ந்த 3 மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் கடும்  எதிர்ப்பினை தாண்டி மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.இந்த மசோதாக்களில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு அம்சங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று பலர் கூறுகின்றனர்.

முக்கியமாக விவசாயிகளுக்கு முக்கியமான குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.வெளிநாட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவை தான் இந்த மசோதாக்கள் மூலம் பயன் பெறுவர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன.

ஆனால் மத்திய அரசோ குறைந்த பட்ச ஆதரவு விலை முறை தொடரும் என்றும் அரசு கொள்முதல் தொடரும் என்றும் கூறி வருகிறது.இந்த நிலையில் போலி வாக்குறுதிகளை நம்பும் அளவுக்கு விவசாயிகள் முட்டாள்கள் என மத்திய அரசு நம்புகிறது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் விவசாயிகளுக்கு விலை பொருட்களுக்கான ஆதார விலை கிடைக்க வேளாண் திருத்தச் சட்டம் வழிவகுக்கும் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி எதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த வாக்குறுதிகளை அழிக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும் எனில்  இதுவரை கொடுத்த அனைத்து வாக்குகளையும் மத்திய அரசு நிறைவேற்றிவிட்டதா? என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.ஏனெனில் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என்பதை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செலுத்தப்படும் என்று சொன்னதையும் ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை? என்று ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக  கேள்விகளால் சாடியுள்ளார்.