திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசனுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தொடக்கத்தில் பேச்சுக்கள் எழுந்து வந்தாலும் அதன் பிறகு அது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தில் உதயநிதி தன்னை தீவிரமாக இணைத்துக்கொள்ள ,கிராமசபை கூட்டத்தை நடத்துவதில் ஸ்டாலினும் தீவிரமாக இறங்கி விட்டார்.
ராகுல் காந்தியின் வருகைக்கு பிறகு தற்சமயம் தான் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் உள்ளது என்ற விபரமே தெரியவருகிறது. ராகுல்காந்தியின் வருகைக்கு முன்பு கமல்ஹாசன் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே .எஸ் .அழகிரி அழைப்பு விடுத்திருந்தார்.
இதன் காரணமாக, திமுக கூட்டணியில் கமல்ஹாசனை இணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி இறங்கியிருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்து வந்த சமயத்தில், ஸ்டாலின் அவர்களின் விருப்பம் இல்லாமல் அழகிரி இவ்வாறு பேசி இருப்பாரா? என்றும் பேச்சுக்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், ஸ்டாலினிடம் இருந்து எந்த மாதிரியான தகவல் வந்ததோ தெரியவில்லை. உடனடியாக கே. எஸ். அழகிரி திமுக கூட்டணிக்கு கமல்ஹாசனை அழைக்கவில்லை. வந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தேன் இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம், திமுகவின் கருத்து கிடையாது. என விளக்கம் கொடுத்திருந்தார். அதோடு கமல்ஹாசன் தனியாக களம் கொண்டால் வாக்குகள் சிதறும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அதன் காரணமாகவே எங்களுடைய கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தேன் என்றும் தெரிவித்தார் கே எஸ் அழகிரி.
காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நடிகர் கமல்ஹாசன் எங்களுடைய கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு கமல்ஹாசனை அழைப்பு விடுத்து இருக்கின்ற நிலையிலே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு தகுந்த நேரம் இதுவல்ல கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று நழுவி இருக்கின்றார் கமல்ஹாசன்.
இந்த விஷயத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்று ஸ்டாலினிடம் வினவியபோது, நடிகர் கமல்ஹாசனை காங்கிரஸ் கட்சி அழைப்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்று ஸ்டாலின் ஒதுங்கிக் கொண்டதாக சொல்கிறார்கள். நடிகர் கமல்ஹாசனின் விஷயத்தில் ஸ்டாலின் எதற்காக அவ்வாறு ஒதுங்கி நிற்கிறார் என்று திமுக தரப்பில் விசாரணை செய்தபோது, பிரசாந்த் கிஷோர் தெரிவித்த ஒரு சில விஷயம் காரணமாகதான் தளபதி ஒதுங்கி நிற்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
சீரமைப்போம் தமிழகத்தை என்ற பிரச்சாரத்தை நடத்திய கமலஹாசன் தன்னுடைய பிரச்சாரத்தின் பொழுது மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது எனவும், தன்னுடைய கார் கப்பல் ஒன்று மிதந்து கொண்டு வருகிறது எனவும், தன்னை பெருமிதமாக பேசியிருந்தார். அதற்கு ஏற்றார் போல கமல்ஹாசன் செல்லுமிடமெல்லாம் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஆனாலும் இந்தக் கூட்டங்களுக்கு என்ன காரணம், என திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் எடுத்த சர்வே ஒன்றில் கமல்ஹாசனிடம் 2 சதவீத வாக்குகள் தான் இருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இதை அடிப்படையாக வைத்து மட்டும் இந்த விஷயத்தில் ஸ்டாலின் ஒதுங்கி நிற்க வில்லையாம், தன்னுடைய கட்சிக்கு வேலை செய்ய வருவதற்கு முன்னர் கமல் கட்சிக்கு வேலை செய்து வந்ததார் பிரசாந்த் கிஷோர் . அந்த வகையிலேயே அந்த கட்சியின் பலவீனங்களையும் தெரிவித்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.
இதன் காரணமாகவே கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட விஷயத்தில் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் கமல்ஹாசனை காங்கிரஸ் கட்சி அழைப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறாராம் ஸ்டாலின்.