பா.ரஞ்சித்தின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த திட்டங்கள்!

Photo of author

By CineDesk

பா.ரஞ்சித்தின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த திட்டங்கள்!

CineDesk

Updated on:

பா.ரஞ்சித்தின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த திட்டங்கள்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியானது. இந்தப் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிய பின்னரும் இன்னும் ரஞ்சித் அடுத்தப் படத்தை இயக்க ஒப்பந்தமாகவில்லை. அவர் இயக்குவதாக கூறப்பட்ட பாலிவுட் படம் ஒன்றும் ஆர்யா நடிப்பில் ஒரு படம் இயக்குவதாக கூறப்பட்டதும் எந்த நிலையில் இருக்கின்றது என்பது இன்னும் தெரியவில்லை

இந்த நிலையில் பா ரஞ்சித் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இயக்குனர் ரஞ்சித் முழுநேரமாக தயாரிப்பு தொழிலில் இறங்கி விட்டார்.

பா ரஞ்சித் அடுத்ததாக தொடர்ச்சியாக ஐந்து படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் அவர் தயாராக இருக்கும் ஐந்து படங்களை மேற்கு தொடர்ச்சி மலை இயக்குனர் லெனின் பாரதி, பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் சுரேஷ்மாரி, மோசஸ், பிராங்க்ளின் ஜோசப் ஆகியோர் இயக்க உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஒவ்வொன்றாக விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாகவும் ரஞ்சித் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளன. இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் அடுத்த படத்தை இயக்க கால தாமதமானாலும் தொடர்ச்சியாக படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.