சிவாஜியை அறைந்த பத்மினி!! வலியால் அலறிய சோகம்!!

0
156
Padmini slapped Shivaji!! Sadness screamed with pain!!
Padmini slapped Shivaji!! Sadness screamed with pain!!

தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் தான் சிவாஜி கணேசன். முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி, நாட்டிய பேரொலி என்று அழைக்கப்படும் பத்மினியுடன் இணைந்து 60-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1954-ம் ஆண்டு வெளியான எதிர்பாராதது படத்தில் பத்மினி சிவாஜி இருவரும் காதலித்து வரும் நிலையில் வெளிநாட்டிற்கு படிக்க போகும் சிவாஜி, எதிர்பாராத விதமாக விமான விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. இதனிடையே சிவாஜியின் அப்பாவை பத்மினி திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டு, திருமணமும் முடிந்துவிடுகிறது.

விமான விபத்தில் சிக்கிய சிவாஜி கண்பார்வையை இழந்து பத்மினியின் வீட்டில் தஞ்சமடைகிறார். தனது அப்பாவின் மனைவி என்று தெரியாத சிவாஜி பத்மினிக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதால் அவளுடைய நண்பனாக அந்த வீட்டில் இருக்கிறார். அப்போது ஒருநாள் பத்மினி கையை பிடித்து சிவாஜி பழைய நினைப்பில் நடந்துகொள்ள பத்மினி அவரை ஓங்கி அடித்துவிடுவார்.

இந்த காட்சி நிகழ்ந்த போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் தான் இணையத்தில் பரவப்பட்டு வருகிறது. அவை பின்வருமாறு,

சிவாஜியை அடிக்க பத்மினி தயங்கியபோது பரவாயில்லை நடிப்புதானே தைரியமாக பண்ணுங்க என்று சிவாஜி கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட பத்மினி படப்பிடிப்பு தொடங்கியவுடன் சிவாஜியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். ஒரு அறையோடு விட்டுவிடாமல் மாறி மாறி அறைந்துள்ளார்.காட்சி சிறப்பாக வருவதை பார்த்த இயக்குனரும் கட் சொல்ல மறந்துவிட்டதால், பத்மினியும் அதிரடியாக சிவாஜி பலமுறை அறைந்து விட்டார்.

ஒரு கட்டத்தில் சிவாஜியின் முகத்தில் இருந்து ரத்தம் சொட்டிய நிலையில், வலி தாங்கிக்கொள்ள முடியாத சிவாஜி கட் கட் என்று கத்திய நிலையில், படப்பிடிப்பு குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பத்மினிக்கு ஊசி போட்டு கைகால் அமுக்கிவிட்டதாகவும் நடிகர் சிவாஜி கணேசனை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் ஒரு பேட்டியில் அவரே தெரிவித்திருக்கிறார்.

Previous articleஆதார் கார்டை புதுப்பிக்க நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!! மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!!
Next articleரூ.500 நோட்டு குறித்த RBI யின் புதிய அறிவிப்பு!! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!