காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இன்று காலை 1:30 மணி அளவில் பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவத்தினர் ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். இதன் தாக்கம் காரணமாக பாகிஸ்தான் நாங்கள் கட்டாயம் பதிலடி கொடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை பயிற்சியானது கொடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த தாக்குதலில் காஷ்மீரை தாக்கிய பயங்கரவாதிகளின் பயிற்சி அளித்த முகாம்களை தான் டார்கெட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்கும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இந்தியா முழுவதும் முக்கியமான இடங்களாக திகழும் பகுதிகளில் பலத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி காஷ்மீரை சுற்றியுள்ள பகுதிகளில் விமான சேவையையும் ரத்து செய்துள்ளனர்.
தமிழகத்தில் முக்கிய இடமான கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் நிர்வாகிகள் போர்க்கால ஒத்திகையை நடத்தி வருகின்றனர். இந்த ஒத்திகையில் கலந்து கொண்ட அதிகாரிகள், எதிர் தாக்குதலான வான்வழி அல்லது குண்டு போன்றவை விழுந்தால் முதலில் யாரும் பதட்டப்படாமல் இருக்க வேண்டும். பின்பு மாணவர்கள் எம் மாதிரியான பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல இது போர்க்கால ஒத்திகை பயிற்சி என்பதால் இது ரீதியாக மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு துறை காவல் துறை என் என் சி மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.