பஹல்காம் தீவிரவாத தாக்குதல்: வெளியாகிய துப்பாக்கி சூடு நடத்தும் முதல் வீடியோ
பஹல்காம் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தும் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் நடந்த அந்த வீடியோவில் “தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொண்ட பயணிகள் சத்தம், அலறல், குழப்பம்”, மற்றும் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா வந்திருந்தவர்கள்மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடக்கும் தருணம் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோக்களில் துப்பாக்கிச் சத்தமும், பயத்தில் அலறும் பயணிகள் குரலும் கேட்கப்படுகின்றன.
வீடியோ லிங்க்:
https://www.instagram.com/share/reel/BBJsxhFD4u
“இதை மோடிக்கு சொல்லிவிடு” – உயிர்தப்பியவரிடம் பயங்கரவாதி கூறியதாக குற்றச்சாட்டு
இந்த தாக்குதலில் உயிர்தப்பியவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். கேரளாவில் இருந்து வந்த பல்லவி என்ற பெண், தன்னுடைய கணவர் மஞ்சுநாத் கொல்லப்பட்ட பின், தானும் தன்னுடைய 18 வயது மகனும் பயங்கரவாதியிடம் தங்களையும் கொல்லக் கோரியதாக கூறியுள்ளார். ஆனால், அந்த பயங்கரவாதி, “உன்னை கொல்ல மாட்டேன், இந்த சம்பவத்தை பிரதமர் மோடிக்கு சொல்ல வேண்டும்” என கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்லவி கூறியதாவது:
“நாங்கள் பஹல்காமில் இருந்தோம். என் கணவர் என் கண்முன்னே உயிரிழந்தார். நான் அழவும் முடியவில்லை, என்ன நடந்தது என்பதே புரியவில்லை. நாங்கள் எங்கள் மகன் அபிஜேயாவுடன் கேரளாவின் சிவமோகாவிலிருந்து வந்திருந்தோம்.”
அவர்கள் பயணித்த கார் டிரைவர் ஒருவர் இந்து பயணிகள் குறிவைக்கப்பட்டதாக கூறியுள்ளார். தாக்குதலுக்குப் பிறகு மூன்று பேர் ‘பிஸ்மில்லா’ என்று கூறியவாறு அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறுகிறார்.
“மூன்று அல்லது நான்கு பயங்கரவாதிகள் இருந்தனர். என் கணவர் கொல்லப்பட்ட பின், நான் ஒரு பயங்கரவாதியை நேரில் பார்த்து, ‘என் கணவரை கொன்றீர்களே, என்னையும் கொல்லுங்கள்’ என்று கேட்டேன். என் மகனும் அந்த பயங்கரவாதியை நோக்கி, ‘நாயே, என் அப்பாவை கொன்றாய், நம்மையும் கொல்’ என்று கூறினான்.”
இந்த நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. PM மோடி, பாதுகாப்பு அமைப்புகள் மீது பயணிகள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.