இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Parthipan K

paid-vacation-for-them-only-important-announcement-issued-by-the-government

இவர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை! அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்தார். அதனால் காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அந்தவகையில் வரும் 27 ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சுயேச்சைகளையும் சேர்த்து 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்கள் வேட்பாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.அதனை சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் ஆர்வத்துடன் தனக்கென பிடித்த 3 சின்னங்களை குறித்து வைத்தார்கள்.ஒரே சின்னத்தை பலரும் கேட்டதால் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கபட்டது.இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதினால் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.